02 Apr 2021
ஓட்டிச பாதிப்புள்ள குழந்தைகளின் பிரச்சினைகளும் அணுகுமுறைகளும்
April -2ஆம் திகதி உலக ஓட்டிச தினமாகும். கோவிட்-19 பெருந் தொற்று தாக்கத்தினால் இந்த ஆண்டு ஐ.நா உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தொடர்பாக 'பணியிடத்தில் சேர்த்தல்: தொற்றுநோய்க்கு பிந்தைய உலகில் சவால்கள் மற்றும் வாய்ப்புகள்' என்ற தலைப்பில் நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது.
குழந்தைகளுக்கு ஓட்டிசம் எனும் மதியிறுக்க குறைபாடு எதனால் ஏற்படுகிறது என இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பத்தாயிரம் ஆயிரம் குழந்தைகளில், 5 பேருக்கு இக்குறைபாடு ஏற்படுகிறது. பெற்றோர் தொடங்கி மருத்துவர்கள் வரை ஓட்டிசம் குறித்த போதிய விழிப்புணர்வு இங்கு இல்லை. இதனை முன்னரே கண்டுபிடிப்பதனாலும், சரியான பயிற்சிகள் தருவதனாலும் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும். சரியான நேரத்தில் கண்டுபிடித்து, சரியான சிகிச்சையளித்தால் முற்றிலுமாக குணப்படுத்தப்பட வாய்ப்புகள் அதிகம். பெண் குழந்தைகளை விட, ஆண் குழந்தைகள் தான் இக்குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
ஓட்டிச குறைபாடுள்ள குழந்தைகள் அதீத புத்திசாலியாக இருக்கவும் வாய்ப்புண்டு. புத்திசாலித்தனத்திற்கும் இக்குறைபாட்டிற்கும் எவ்வித தொடர்புமில்லை. இதனை அடையாளம் காணமல் விடுவதால் இக்குழந்தைகளின் எதிர் காலத்தை வீணாக்கிக்;கொண்டு இருக்கிறோம். இங்கே மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகளில் பலரும் ஓட்டிசத்தின் பிடியில் இருப்பவர்கள் என்கிறார்கள் இதற்காக பணியாற்றிக் கொண்டிப்பவர்கள். நம்மால் முடிந்த அளவுக்கு ஓட்டிசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.
ஓட்டிசம் என்பது மூளை தகவல்களை பயன்படுத்திப் புரிந்து கொள்ளும் திறனை தடுப்பது. பார்த்தல், கேட்டல் என உணரும் விஷயங்களை சரியாகப் பயன்படுத்த முடியாமல் போவதனால் மனிதர்களின் நடவடிக்கைகள் மாறிப்போவதே ஓட்டிசம். இது மூளை வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடாகும். மூளையின் முக்கிய செயல்பாடுகளாகிய பேச்சு திறன், சமுதாய தொடர்பு மற்றும் புலன் உணர்வு ஆகியவற்றை பாதிக்கும் நோய். ஏனைய குழந்தைகளை போல் பேச முடியாது, நடக்க முடியாது, நாம் யார், எங்கு இருக்கிறோம் என்ற விவரங்கள் தெரியாது. இதனால், அவர்களால் மற்றவர்களை போல் இயல்பு வாழ்க்கை வாழ முடியாது.
ஓட்டிசம் பிறவி குறைபாடாக இருந்தாலும், பிறந்த உடனே கண்டுபிடிக்க முடியாது. 6 மாதம் முதல் 3 வயதுக்குள் ஓட்டிசம் குறைபாட்டை கண்டுபிடிக்க முடியும். இது குறித்து விழிப்புணர்வு இல்லாததால், பலர் 3 வயதுக்குள் கண்டுபிடிக்க தவறி விடுகின்றனர். 3 வயதுக்குள் கண்டுபிடித்தால் உரிய பயிற்சி அளித்து, ஓரளவு குறைபாட்டை சரி செய்துவிடலாம்.
ஓட்டிசத்தின் தன்மைகள் :
•சமூக வாழ்வுக்கு தேவையான ஆற்றல்கள் இல்லாமை
இந்தக் குறைபாடு உள்ள குழந்தைகள் சமவயது உடைய குழந்தைகளுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டு அதை மேலும் வளர்க்கும் வழிமுறைகளை அறியாதவர்களாக இருப்பார்கள். அதற்காக நல்ல உறவை உருவாக்கிக்கொள்ள அவர்கள் விரும்புவதில்லை என்று கூறிவிட முடியாது அதற்கான வழிமுறைகள் அவர்களுக்கு தெரியாது, அவ்வளவுதான்! சமூக உறவுகளை உருவாக்கிக் கொள்ளும் ஆற்றல்கள் அவர்களுக்கு கற்றுத் தருவது முக்கியமாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு பணி ஆகும்.
•தொடர்புகொள்ளும் ஆற்றல்கள் இல்லாமை
ஓட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தொடர்பு கொள்ளும் ஆற்றல்கள் இல்லாதவர்கள். இவர்களில் பெரும்பான்மையோர் பேசும் திறன் அற்றவர்கள். அப்படியே ஒருக்கால் பேசும் திறன் இருந்து மொழி ஆற்றலும் வாய்க்கப் பெற்றவர்கள் கூட அவற்றை திறம்பட கையாளும் வழி தெரியாதவர்களாகத் தான் இருப்பார்கள். மேலும் பேச்சு மற்றும் முகபாவங்கள் சைகைகள் மூலம் தங்கள் எண்ணங்களை உணர்த்துவதற்கோ, அல்லது மற்றவர்கள் உணர்த்துவதை புரிந்துகொள்ளவோ இயலாதவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
•விளையாட்டுகளுக்கான திறனோ ஆர்வமோ இல்லாமை
சாதாரணமாக விளையாட்டின் மீது குழந்தைகளுக்கு இருக்கும் ஆர்வமும் கற்பனைத் திறனும் ஓட்டிசக் குழந்தைகளிடம் காணப்படுவதில்லை. தன்னை ஒரு மிருகமாகவோ, பறவையாகவோ பாவித்துக் கொண்டு அவற்றின் நடை, உடை பாவனைகளை விளையாட்டில் புகுத்தி மகிழும் கற்பனைத்திறன் இல்லாதவர்கள் இவர்கள். புலனியக்க ஒருங்கிணைப்பில் உள்ள பிரச்சினையால் (Disorder of Sensory Integration) சிறிதும் சலிப்படையாமல் தொடர்ந்து ஒரே மாதிரியான விளையாட்டுகள், அங்க அசைவுகளில் இந்தக் குழந்தைகள் ஈடுபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இக் குறைபாடுகள் பொதுப்படையானவை, நபருக்கு நபர் மாறுபடக்கூடியவை. ஓட்டிசத்தினால் பாதிக்கப்படும் ஒரு நபர் அந்தக் கோளாறு இருப்பதையே அறியாது தன் வாழ்க்கையை வாழ்ந்து முடிப்பதுண்டு. இந்தக் குறைபாட்டினால் இயல்பான வாழ்க்கை பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறவர்களும் இருக்கிறார்கள் என்பதும் உண்மைதான்.
அறிகுறிகள் ஆரம்பக் கட்டத்திலேயே 'ஓட்டிசம்' இருப்பதை பரிசோதித்து கண்டறிதல் சிகிச்சைக்கும், மறுவாழ்வு திட்டங்களை மேற்கொள்வதற்கும் மிக அவசியமானது. மற்ற நோய்களைப் போல் படிப்படியாக ஆய்ந்து அறிய உதவும் முறையான பாரிசோதனைகள் மற்றும் உடல்ரீதயான அறிகுறிகள் ஓட்டிசத்திற்கு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு குழந்தை நடந்துகொள்ளும் விதத்தை வைத்து அதற்கு இருக்கும் அல்லது இல்லாத சில தன்மைகளை கவனித்துதான் 'ஓட்டிசம்' இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
நடத்தை ரீதியான அறிகுறிகள்
•கண்ணோடு கண் நோக்காது பேசுதல், பழகுதல்
•கூப்பிட்ட குரலுக்கு செவி சாய்க்காது இருத்தல்
•ஒருவர் சொன்னதையே திரும்ப சொல்லுதல்
•தாமதமாகப் பேசத் தொடங்குதல்
•விளையாட்டில் நாட்டமின்றி இருத்தல்
•முகபாவம், சைகை மூலம் எண்ணங்களை உணர்த்தவோ , உணரவோ அறியாதிருத்தல்
•உறவை நீடிக்கச் செய்யும் வழிமுறைகள் அறியாதிருத்தல்
•யார் முகத்தையும் பார்க்காதிருத்தல்.
•தனியாக இருப்பதை விரும்புதல்.
•காது கேளாது போல் இருத்தல்.
•காரணமின்றி மற்றவர்களை தாக்குதல்.
•அதிக வலியை தாங்கிக் கொள்ளுதல்.
•கை, கால்களை வேகமாக அசைத்து வித்தியாசமாக சத்தம் போடுதல்.
•தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ளுதல்.
•பேச்சுத்திறன் குறைதல்.விரல் சூப்புதல், நகம் கடித்தல்.
•பதட்டநிலை.
•அடம் பிடித்தல்.
பேச்சு மற்றும் மொழி அறிகுறிகள்
•ஓட்டிசம் கோளாறு உள்ள பல குழந்தைகள் பேச்சு மற்றும் மொழி புரிதலுடன் போராடுகிறார்கள். அறிகுறிகளில் பின்வருவன அடங்கும்:
•பேசுவதைக் கற்றுக்கொள்வதில் தாமதம் (இரண்டு வயதிற்குப் பிறகு) அல்லது பேசுவதில்லை.
•குரலின் வித்தியாசமான தொனியில் அல்லது ஒற்றைப்படை ஓசைஅல்லது சுருதியுடன் பேசுவது.
•தகவல்தொடர்பு நோக்கம் இல்லாமல் சொற்களை அல்லது சொற்றொடர்களை மீண்டும் மீண்டும் சொல்வது.
•உரையாடலைத் தொடங்குவதில் சிக்கல் அல்லது தொடர்ந்து செல்வதில் சிக்கல்.
•தேவைகள் அல்லது விருப்பங்களை தொடர்புகொள்வதில் சிரமம்.
•எளிய சைகைகள் அல்லது கேள்விகள் புரியயாதுடன் சாதாரணமாக நகைச்சுவை, கேலிசெய்தல் ஆகியவற்றைக் காணமுடியாது
ஓட்டிசம் மதிப்பீடுகள் மேற்கொள்ளும் முறைகள்.
•பெற்றோர்கள்- கண்டறியும் மதிப்பீட்டின் முதல் கட்டத்தில், உங்கள் குழந்தையின் மருத்துவ, வளர்ச்சி மற்றும் நடத்தை வரலாறு குறித்த பின்னணி தகவல்களை உங்கள் மருத்துவருக்கு வழங்குங்கள். நீங்கள் ஒரு குறிப்பேடு வைத்திருந்தால் அல்லது உங்களுக்கு சம்பந்தப்பட்ட எதையும் குறிப்புகள் எடுத்துக்கொண்டிருந்தால், உங்கள் குடும்பத்தின் மருத்துவர் மற்றும் சிகிச்சையாளர் அறிய விரும்புவார் அந்த தகவலைப் அவருடன் பகிரவும்.
•மருத்துவ பரிசோதனை - மருத்துவ மதிப்பீட்டில் ஒரு பொதுவான உடல், ஒரு நரம்பியல் பரிசோதனை, ஆய்வக சோதனைகள் மற்றும் மரபணு சோதனை ஆகியவை அடங்கும். உங்கள் குழந்தைகளின் வளர்ச்சி சிக்கல்களுக்கான காரணத்தை அறிய மற்றும் இணைந்திருக்கும் எந்த நிலைமைகளையும் அடையாளம் காண இந்த முழுத் முதற் பரிசோதனைக்கு உட்படுவார்.
•கேட்கும் சோதனை – குழந்தைகளுக்கு செவிப்புலன் பிரச்சினைகள் சமூக மற்றும் மொழி தாமதங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால், ஓட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு கண்டறியப்படுவதற்கு முன்பு அவை விலக்கப்பட வேண்டும். உங்கள் பிள்ளை முறையான கேட்டல் திறன் மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்படுவார், அங்கு அவர்கள் எந்தவொரு செவித்திறன் குறைபாட்டிற்கும் சோதிக்கப்படுவார்கள், அதே போல் வேறு எந்த செவிப்புலன் சிக்கல்களும் அல்லது சில சமயங்களில் மன இறுக்கத்துடன் இணைந்திருக்கும் ஒலி உணர்திறன் போனடறவையும் உள்ளடங்கும்.
•கவனிப்பு - ஓட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறுடன் தொடர்புடைய அசாதாரண நடத்தைகளைக் காண மேம்பாட்டு வல்லுநர்கள் உங்கள் குழந்தையை பல்வேறு அமைப்புகளில் கவனிப்பார்கள். உங்கள் பிள்ளை மற்றவர்களுடன் விளையாடுவதை அல்லது உரையாடுவதை அவர்கள் பார்க்கலாம்.உங்கள் குழந்தையின் அறிகுறிகள் மற்றும் அவற்றின் தீவிரத்தை பொறுத்து, கண்டறியும் மதிப்பீட்டில் பேச்சு, சமூக, உணர்ச்சி செயலாக்கம் மற்றும் உடலியக்க திறன் சோதனை ஆகியவை அடங்கும். இந்த சோதனைகள் மன இறுக்கத்தைக் கண்டறிவதில் மட்டுமல்லாமல், உங்கள் பிள்ளைக்கு என்ன வகையான சிகிச்சை தேவை என்பதை தீர்மானிக்கவும் உதவக்கூடும்:
•பேச்சு மற்றும் மொழி மதிப்பீடு - ஒரு பேச்சு சிகி;ச்சை நிபுணர் உங்கள் குழந்தையின் பேச்சு மற்றும் தகவல்தொடர்பு திறன்களை மன இறுக்க அறிகுறிகளுக்காக மதிப்பீடு செய்வார், அத்துடன் குறிப்பிட்ட மொழி குறைபாடுகள் அல்லது கோளாறுகளின் அறிகுறிகளையும்; தேடுவார்.
•அறிவாற்றல் சோதனை - உங்கள் பிள்ளைக்கு தரப்படுத்தப்பட்ட நுண்ணறிவு சோதனை அல்லது முறைசாரா அறிவாற்றல் மதிப்பீடு வழங்கப்படலாம்.
•தகவமைப்பு செயல்பாட்டு மதிப்பீடு - யதார்த்த வாழ்க்கை சூழ்நிலைகளில் செயல்படுவதற்கும், சிக்கலைத் தீர்ப்பதற்கும், மாற்றியமைப்பதற்கும் உங்கள் பிள்ளை மதிப்பீடு செய்யப்படலாம். இதில் சமூக, சொற்களற்ற மற்றும் வாய்மொழி திறன்களைச் சோதிப்பது, அத்துடன் ஆடை அணிவது மற்றும் உணவளிப்பது போன்ற அன்றாட பணிகளைச் செய்வதற்கான திறனும் அடங்கும்.
•புலனியக்க மதிப்பீடு - உணர்ச்சி ஒருங்கிணைப்பு செயலிழப்பு பெரும்பாலும் மன இறுக்கத்துடன் இணைந்திருப்பதால், அதனுடன் குழப்பமடையக்கூடும் என்பதால், ஒரு சிகிச்சை நிபுணர் அல்லது தொழில் சிகிச்சை நிபுணர் உங்கள் குழந்தையின் சிறந்த புலனியக்க மற்றும் உணர்ச்சி செயலாக்க திறன்களை மதிப்பிடலாம்.
தீர்வுகள்-
எதனால் 'ஓட்டிசம்' ஏற்படுகிறது என்பது சரிவரத் தெரியவில்லை. தாய், தந்தையரின் பரம்பரையில் யாரேனும் பாதிக்கப்பட்டிருத்தல், மெக்னீசியம், துத்தநாகம் போன்ற கனிமச் சத்துகளின் குறைபாடு, 'செக்ரடின்' என்ற ஹார்மோன் குறைபாடு என பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால் 'ஓட்டிசம்' ஒரு நோய் அல்ல என்பது மட்டும் உறுதி. எனவே அதற்கு மருந்து என்பது கிடையாது. ஆனால் ஆரம்பக்கட்டத்திலேயே அறிகுறிகளைக் கண்டறிந்து, பாதிக்கப்பட்டவர்கள் நடந்து கொள்ளும் முறையை முழுமையான பயிற்சிகள் மூலம் மாற்றி அமைத்து அவர்கள் வாழ்க்கையை முழுமையானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் செய்துகொள்ள உதவலாம்.
இதற்கான வழிமுறைகள் குறைபாடுகளின் தன்மையைப் பொறுத்தும், பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளைப் பொறுத்தும் வேறுபடும் என்பதை புரிந்து கொள்வது அவசியம். ஆரம்பத்திலேயே இந்தக் குறைபாட்டைக் கவனித்து ஆவன செய்வது பெரிதும் உதவும் என்றாலும் அதற்காக தாமதமாகச் செய்தால் பலன் இருக்கப்போவதில்லை என்று அசட்டையாகவும் இருந்து விடவும் கூடாது.
ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப சொல்லிக் கொடுக்கும் போது, அவர்கள் அதைப் புரிந்து கொண்டு அதன்படி நடப்பர். மற்றக் குழந்தைகளை போல் இவர்களால், பாடங்களை படிக்க முடியாது. எனவே இவர்களை, சிறப்பு பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கலாம். அங்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் கற்றுக் கொடுப்பது எளிதாக இருக்கும்.
இந்த குழந்தைகளுக்கு பெற்றோரின் பங்கு முக்கியம். அவர்களால் தான், இந்த குழந்தைகளை இயல்பு வாழ்க்கைக்கு அழைத்து வர முடியும். இது ஒரு குறைபாடு என உணர்ந்து அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதை அவமானம் என கருதக் கூடாது. நாம் நம் குழந்தையை ஏற்று, அதற்குரிய முக்கியத்துவம் கொடுத்தால் தான், இச்சமூக மக்களும் மரியாதை கொடுக்க முன் வருவர். நமது இன்ப, துன்பத்தை அவர்களால் உணர முடியாது. ஒரு துயரமான சூழலில் சிரித்துக் கொண்டிருப்பர். இதற்காக, அவர்களை வெறுக்கக் கூடாது. மூளை குறைபாட்டால் தான், அவர்கள் அப்படி இருக்கின்றனர் என புரிந்து கொள்ள வேண்டும்.
ஏற்கனவே குறிப்பிட்டது போல், ஓட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட எல்லா குழந்தைகளுக்கும், ஒரே மாதிரியான பிரச்னை இருக்காது. எனவே, நம் குழந்தைக்கு என்ன விதமான குறைபாடு உள்ளது என, முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எது வேண்டும், எது வேண்டாம் என சொல்ல தெரியாது. உதாரணமாக, சிறுநீர் கழிக்க வேண்டும் என, உணர்ந்து சொல்ல தெரியாது. ஒவ்வொரு குழந்தைக்கும், ஒவ்வொரு விதமான பிரச்சினை இருக்கும் என்பதால், எல்லா குழந்தைகளுக்கும் பொதுவான பயிற்சி முறைகளை வகுக்க முடியாது. ஒவ்வொரு குழந்தையையும் சரியாக புரிந்து கொண்டு, அதற்கேற்ப பயிற்சிகளை வடிவமைக்க வேண்டும். அவர்களது செயல்களால் கோபப்படாமல், அவர்களை புரிந்து கொண்டு, பொறுமையாக பயிற்சி அளிக்க வேண்டும். இக் குழந்தைகள் வேண்டுமென்றே இதை செய்வதாக கருதி, மிரட்டக் கூடாது. இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். எக்காரணத்தை கொண்டும் எதற்கும் கட்டாயப்படுத்தக் கூடாது. இவர்களுக்கு முதலில் கல்வி என்பது, அன்றாட பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுப்பது தான்.
வழக்கமான கல்வி படித்து, மற்றவர்களை போல் வேலைக்கு செல்ல முடியாது என்பதால், இவர்களுக்கு சிறப்பு தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது. தையல் கற்றுக் கொடுப்பது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கலாம். இக் குழந்தைகள் சில அற்புதத் திறமைகளை கொண்டிருப்பர். அதைக் கண்டுபிடித்து ஊக்கப்படுத்த வேண்டும். மனதை ஒரு நிலைப்படுத்துவதற்கான பயிற்சிகளை அளிக்க வேண்டும். வண்ணம் தீட்டுவது, பேனா, பென்சில் கொடுத்து ஏதாவது கிறுக்க செய்வது என, பல்வேறு பயிற்சிகள் மூலம் அவர்களை அன்றாட வாழ்க்கைக்கு தயார்படுத்த வேண்டும்.
ஓட்டிசம் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தனித்தனி பலங்களும்,பலவீனங்களும், சவால்களும் உள்ளன.சாதாரணமாக உள்ளவர்களைவிட ஓட்டிசம் உள்ளவர்கள் கற்றுக் கொள்ளும், சிந்திக்கும் மற்றும் சிக்கலைத் தீர்க்கும் வழிகள் மிகவும் கடுமையான சவால்களுக்கு உட்பட்டவர்கள்.சிலருக்கு அவர்களின் அன்றாட வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க ஆதரவு தேவைப்படலாம், மற்றவர்களுக்கு குறைந்த ஆதரவு தேவைப்படலாம், சில சந்தர்ப்பங்களில், முற்றிலும் சுதந்திரமாக வாழக்கற்றுக் கொள்கிறார்கள்.
ஒவ்வொரு குழந்தையையும் சரியாக புரிந்து கொண்டு, அதற்குகேற்ப பயிற்சிகளை வடிவமைக்க வேண்டும். அவர்களது செயல்களால் கோபப்படாமல், அவர்களை புரிந்து கொண்டு, பொறுமையாக பயிற்சி அளிக்க வேண்டும். இக்குழந்தைகள் வேண்டுமென்றே இதை செய்வதாக கருதி, மிரட்டக் கூடாது. இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். எக்காரணத்தை கொண்டும் எதற்கும் கட்டாயப்படுத்தக் கூடாது. இவர்களுக்கு முதலில் கல்வி என்பது, அன்றாட பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுப்பது தான் என்பதை புரிய வேண்டும்
சிகிச்சை முறைகள்
1. பிரயோக நடத்சார் பகுப்பாய்வு சிகிச்சை முறை (ABA)
ஓட்டிசம் பாதிப்புள்ள குழந்தைகளுக்கான மிகச் சிறந்த, அதிக முன்னேற்றத்தை கொடுத்துள்ள சிகிச்சை முறை 'பிரயோக நடத்சார் பகுப்பாய்வு' ((Applied Behavioral Analysis). . இது உலகலாவிய ரீதியில் பயன்படுத்தப்படும் ஓட்டிசத்திற்கு சிறந்த ஓர் சிகிச்சை முறையாகும்.
2. புலன் ஒருங்கிணை சிகிச்சை
காட்சிகள், ஒலிகள் மற்றும் மணங்கள் போன்ற புலன் சார்ந்த விவரங்களைக் குழந்தைகள் முறையாகக் கையாள்வதற்கு இந்தச் சிகிச்சை உதவுகிறது. சில குழந்தைகள் ஒரு சில ஒலிகளைக் கேட்டு பயப்படும், அல்லது, பிறர் தன்னைத் தொடுவதற்கு அனுமதிக்காது, அதுபோன்ற குழந்தைகளுக்குப் புலன் ஒருங்கிணைப்புச் சிகிச்சை உதவலாம்.
3. பேச்சுச் சிகிச்சை
ஒரு குழந்தை தன்னுடைய தகவல் தொடர்பை மேம்படுத்திக்கொள்வதற்குப் பேச்சுச் சிகிச்சைகள் உதவுகின்றன. இந்தச் சிகிச்சைகளில், சைகை காட்டுதல், பட அட்டைகளைப் பயன்படுத்துதல்போன்ற மாற்று முறைகளைப் பயன்படுத்தி ஒரு குழந்தை தன்னுடைய எண்ணங்களையும் சிந்தனைகளையும் பிறருக்குத் தெரிவிப்பதற்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இவர்களுக்கு வழக்கமான கல்வி படித்து, மற்றவர்களை போல் வேலைக்கு செல்ல முடியாது என்பதால், இவர்களுக்கு சிறப்பு தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது. தையல் கற்றுக் கொடுப்பது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கலாம். இக்குழந்தைகள் சில அற்புதத் திறமைகளை கொண்டிருப்பர்.அதைக் கண்டுபிடித்து ஊக்கப்படுத்த வேண்டும். மனதை ஒரு நிலைப்படுத்துவதற்கான பயிற்சிகளை அளிக்க வேண்டும். வண்ணம் தீட்டுவது, பேனா, பென்சில் கொடுத்து ஏதாவது கிறுக்க செய்வது என, பல்வேறு பயிற்சிகள் மூலம் அவர்களை அன்றாட வாழ்க்கைக்கு தயார் படுத்த வேண்டும்.
ஆனால் 'ஓட்டிசம்' ஒரு நோய் அல்ல என்பது மட்டும் உறுதி. பெரிய மேதைகள் கூட ஓட்டிச குறைபாடுள்ளர்களாக காணப்பட்டவர்கள் எப்பது உண்மையே. எனவே அதற்கு மருந்து என்பது இல்லை. ஆனால் ஆரம்பக்கட்டத்திலேயே அறிகுறிகளைக் கண்டறிந்து, பாதிக்கப்பட்டவர்கள் நடந்து கொள்ளும் முறையை முழுமையான பயிற்சிகள் மூலம் மாற்றி அமைத்து அவர்கள் வாழ்க்கையை முழுமையானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் செய்துகொள்ள உதவலாம்.
கலாநிதி.க.கஜவிந்தன்.
சிரேஸ்ட உளவியல் விரிவுரையாளர்
மெய்யியல்-உளவியல் துறை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்