கனடா செய்திகள்

ஒஷாவா பகுதியில் பேரூந்து ஒன்றினால் மோதுண்ட பெண் மருத்துவமனையில் அனுமதி

09 Jun 2019

இன்று பிற்பகல் வேளையில் ஒஷாவா பகுதியில் பேரூந்து ஒன்றினால் மோதுண்ட பெண் ஒருவர் பாரதூரமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Olive Avenue மற்றும் Harmony வீதிப் பகுதியில் இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதனை காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சுமார் 70 வயதுடைய குறித்த அந்த வயதான மாது, டூர்ஹம் பிராந்திய போக்குவரத்து பேரூந்து ஒன்றினால் மோதுண்டுள்ள நிலையில், மோசமான காயங்களுடன் அவர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் உயிராபத்தான நிலையில் காணப்படுவதாக முன்னர் கூறப்பட்ட போதிலும், உயிராபத்தான கட்டத்தனைத் தாண்டிவிட்டதாக பிந்திக்கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், குறித்த அந்த பேரூந்தின் சாரதி மீது உடனடியாக குற்றச்சாட்டுகள் எவையும் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்