கனடா செய்திகள்

ஒஷாவாவில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

14 May 2019

ஒஷாவாவில் உள்ள அடுககுமாடிக் குடியிருப்பு வீடு ஒன்று நேற்று இரவு எரிந்துகொண்டிருந்த நிலையில் அதற்குள் இருந்து பெண் ஒருவரின் சடலத்தை மீட்டு விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள், அந்தப் பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக முடிவு செய்துள்ளனர்.

Nonquon வீதியில் உள்ள அந்த வீட்டில், நேற்று இரவு 7.10 அளவில் இந்த தீப்பரவல் அறியப்பட்டு, அங்கு தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீப்பரவலைக் கட்டுப்பாடடினுள் கொண்டுவந்த நிலையில், அதற்குள் இருந்து வயதான பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டதாக டூர்ஹம் பிராந்திய காவல்துறையினர் தகவல் வெளியிட்டிருந்தனர்.

சுமார் 80 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண் உயிராபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விசாரணைகளில் இருந்து அவர் கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்ததை அடுத்து, விசாரணைகளைத் தீவிரப்படுத்திய மனிதக் கொலை தொடர்பிலான சிறப்பு விசாரணைப் பிரிவினர், சிறிது நேரத்திலேயே 56 வயதான ஆண் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

குறித்த அந்தப் பெண் எவ்வாறு கொல்லப்பட்டார் என்ற விபரங்கள் எதனையும் இதுவரை வெளியிடாத காவல்துறையினர், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், டூர்ஹம் பிராந்தியத்தில் இந்த ஆண்டில் இடம்பெற்றுள்ள ஐந்தாவது மனிதக் கொலை இது என்றும் தெரிவித்துள்ளனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்