இலங்கை செய்திகள்

ஒற்றையாட்சி உள்ளிட்ட புதிய அரசியலமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

14 Feb 2020

புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் போது கவனத்திற்கொள்ளவேண்டிய விடயங்களை உள்ளடக்கிய முன்மொழிவுகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது

கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில்  நேற்று இடம்பெற்ற “ பலமிக்க அரசு  எமது அரசியலமைப்பொன்றுக்கான முன்மொழிவுகள்“ என்ற தொனிப்பொருளின் கீழ்  அமைப்பு தயாரித்த முன்மொழிவுகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிமையுள்ள பலமான அரசை மீண்டும் உருவாக்குதல், உண்மையான மக்கள் பிரதிநிதித்துவம் மற்றும் மக்கள் இறைமை, ஒற்றை ஆட்சியை நாட்டில் உறுதிப்படுத்தல், நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை மற்றும் நீதித்துறைகளுக்கிடையில் அதிகார சமநிலை மற்றும் கடமையை முதன்மையாகக் கொண்ட சமூகம் என்ற ஐந்து இலக்குகளை உள்ளடக்கிய  முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டுள்ளது

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்