கனடா செய்திகள்

ஒன்றாரியோவில் மோசடி தொடர்பில் எச்சரிக்கை

22 Nov 2022

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் மோசடி தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஒன்றாரியோவின் நோர்பொல்க் பகுதியில் இந்த மோசடி சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிரேஸ்ட பிரஜை ஒருவரிடம் சுமார் 800000 டொலர்கள் மோசடி செய்யப்பட்டுள்ளது.

நிதி நிறுவனமொன்றின் பிணை முறிகளை விற்பனை செய்யும் நபர் என்ற போர்வையில் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு மோசடி செய்துள்ளார்.

இந்த தொலைபேசி அழைப்பினை நம்பிய சிரேஸ்ட பிரஜை மூன்று தடவைகளில் மொத்தமாக 800,000 டொலர்களை வங்கி கணக்கு ஊடாக பரிமாற்றம் செய்துள்ளார்.

நவம்பர் மாதம் பிணை முறி முதிர்வடைவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பணம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் நிதி நிறுவனத்தை தொடர்பு கொண்ட போதே இந்த சம்பவம் ஓர் மோசடி என்பது தெரியவந்துள்ளது.

இவ்வாறான தொலைபேசி அழைப்புக்கள் வந்தால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam