கனடா செய்திகள்

ஒன்றாரியோவில் எரிபொருள் விலை வீழ்ச்சி

05 Aug 2022

ஒன்றாரியோ மாகாணத்தில் எரிபொருட்களுக்கான விலைகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தென் ஒன்றாரியோ மாகாணத்தில் இந்த வார இறுதியில் பெருமளவில் எரிபொருள் விலை வீழ்ச்சியடைய உள்ளது.

அண்மைய வாரங்களாக எரிபொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக வீழ்ச்சியை பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

72 மணித்தியால இடைவெளியில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 20 சதத்தினால் வீழ்ச்சியடைவதாகவும், இவ்வாறான ஓர் நிலைமையை தாம் முன்னொருபோதும் கண்டதில்லை என கனடாவின் எரிபொருள் கொள்வனவு இயலுமை அமைப்பின் தலைவர் டென் மெக் டியாகு தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு நாள் இடைவெளியில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 12 சதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 13ம் திகதியின் பின்னர் இவ்வாறு எரிபொருட்களின் விலைகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறெனினும், எரிபொருட்களின் விலைகள் விரைவில் மீளவும் அதிகரிக்கும் சாத்தியங்களை மறுப்பதற்கில்லை என துறைசார் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam