கனடா செய்திகள்

ஒன்ராறியோ கஞ்சா வாடிக்கையாளர்களின் தனி நபர் தகவல்கள் திருடப்பட்டுள்ளன

08 Nov 2018

கஞ்சாவை விற்பனை செய்யும் ஒன்ராறியோ கனபிஸ் என்று அழைக்கப்படும் நிறுவனத்திடம் இருந்து தபால் முலம் கஞ்சாவை பெற்ற கொள்ளும் வடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக ஒன்ராறியோ கனபிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

சுமார் 4500 வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன் நிறுவனத்தின் வலைத்தளத்தில் தனி உரிமை தகவல்கள் புதுப்பித்தல் பகுதியில் இருந்தும் கனடிய தபால் சேவையின் விநியோக தொடரியின் (Traking)மூலமும் இந்த தகவல்கள் திருடப்பட்டுள்ளன.

ஒன்ராறியோவின் தனி உரிமை மீறல் ஆணையாளருக்கு இது சம்பந்தமாக 1000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.
இந்த சுயவிபர திருட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கனாபிஸ் நிறுவனம் மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தும் என தெரிவித்துள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்