கனடா செய்திகள்

ஒன்ராறியோ ஏரியை நீந்திக் கடக்க முற்பட்ட யுவதி காயம் காரணமாக மீட்கப்பட்டார்

11 Jul 2018

ஒன்ராறியோ ஏரியை முழுமையாக நீந்தி கடக்க முற்பட்ட யுவதி ஒருவர் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அந்த முயற்சியை கைவிட்டுள்ளார்.

ஒட்டாவா பகுதியை சேர்ந்த 16 வயதுடைய மாயா என்ற குறித்த இளம் பெண் 88 கிலோமீற்றர் நீளமுடைய ஏரியை கடக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இருப்பினும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது தோள்பட்டையில் காயம் ஏற்படவே அவர் ஏரியில் இருந்து மீட்கப்பட்டார்.

குறித்த யுவதி 20 மணி நேரங்களில் 35 கிலோமீற்றர் தூரத்தை கடந்திருந்ததாகவும் இருப்பினும் 4 மணி நேரத்திற்கு முன்பே அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்த அவரது தந்தை அவர் நீரில் இருந்து வெளியில் வர முயற்சிக்கவில்லை என கூறினார்.

இருப்பினும் அவரது பயிற்றுவிப்பாளரும் தந்தையும், இதனை அறிந்து நீரில் இருந்து அவரை மீட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு Niagara ஏரியை 24 மணி நேரத்தில் கடக்கும் முயற்சியில் 300 மீற்றர் தூரத்தை அடைந்த போது, அங்கு மின்னல் தாக்கம் அதிகமாக இருந்தமை காரணமாக, அவர் நீரில் இருந்து வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்