கனடா செய்திகள்

ஒன்ராறியோ அரசாங்கம் பாடசாலை திருத்தப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை ரத்துச் செய்தது

11 Jul 2018

ஒன்ராறியோவின் புதிய அரசாங்கம் இந்த ஆண்டு பாடசாலை திருத்தப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் டொலர் நிதியை ரத்துச் செய்துள்ளது.

புதிய முதல்வராக பதவியேற்ற ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சியின் தலைவர் டக் போர்ட் தேர்தல் பிரச்சாரத்தின் போது வர்த்தக அமைப்பில் மாற்றம் கொண்டுவரவுள்ளதாக தெரிவித்தமையின் விளைவாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் ரொறன்ரோ பாடசாலையின் பழுதுகளை மீண்டும் சரி செய்வதற்கு 4 பில்லியன் டொலரை அறிவித்திருந்த நிலையில், இந்த அறிவிப்பானது ஏமாற்றம் தருவதாக ரொறன்ரோ பாடசாலைகள் வாரியத் தலைவர் றோபின் பில்கி கூறினார்.

மேலும் இந்த மாகாணத்தில் 4 ஆயிரத்து 900 பொதுமக்களின் 15 பில்லியன் டொலர் நிதியில் பழுதுபார்க்கும் வேலைகள் காணப்படுகின்றதாக சுட்டிக்காட்டிய அவர், இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்