கனடா செய்திகள்

ஒன்ராறியோவின் பெரும்பாலான தென்பிராந்தியங்களில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை

15 Apr 2019

ரொறன்ரோ பெரும்பாகம் உள்ளிட்ட ஒன்ராறியோவின் பெரும்பாலான தென்பிராந்தியங்களில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் வாழும் மக்கள் இன்று திங்கட்கிழமை கடுமையான மழையினை எதிர்கொள்ள நேரிடும் என கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம், எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரொறன்ரோ உள்ளிட்ட மாநிலத்தின் பெரும்பாலான பாகங்களுக்கு வெளியிட்டுள்ள சிறப்பு வானிலை அறிவித்தலில், 20இலிருந்து 40 மில்லிமீட்டர் வரையிலான மழை எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை, பலத்த இடிமுழக்கமும் காணப்படக்கூடும் எனவும், அதிகளவான மழைப் பொழிவு ரொறன்ரோவின் கிழக்குப் பிராந்தியங்கள் மற்றும் நயாகரா பிராந்தியங்களில் பதிவாகக்கூடிய சாத்தியக்கூறு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்