கனடா செய்திகள்

ஒன்ராறியோ உற்பத்தி வருமானத்தில் 4 பில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்படும் நிலை

11 Jan 2019

ஒஷாவாவில் அமைந்துள்ள ஜெனரல் மோட்டோர்ஸ் வாகன உற்பத்தித் தொழிற்சாலை மூடப்படவுள்ள நிலையில், அதனால் ஒன்ராறியோ மாகாணத்திற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வருமானத்தில் 4 பில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்தத் தொழிற்சாலை மூடப்படுவதன் காரணமாக, 4,400 பேருக்கான வேலை இழப்புகள் உடனடியாக ஏற்படும் என்பதுடன், அது ஒன்ராறியோ பணியாளர் சமூகத்தில் பலத்த பாதிப்பினை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தொழிற்சங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளதுடன், குறித்த நிறுவனம் மூட்டப்படுவதைத் தொடர்ந்து, வேலை இழப்பு எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் என்பதையும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

தொழிற்சாலை மூடப்பட்டவுடன் ஏறக்குறைய 4,400 பேர் வேலை இழப்பினைச் சந்திப்பார்கள் எனவும், அடுத்துவரும் 5 ஆண்டுகளில் அந்த எண்ணிககை 6,300 ஆக அதிகரிக்கும் என்பதையும் அது சுட்டிக்காட்டியுள்ளது.

அந்த வகையில் 2025ஆம் ஆண்டவில் ஒன்ராறியோவில் 14,000 பேர் வேலை அற்று இருப்பதற்கு, இந்த தொழிற்சாலை மூடப்படுவது காரணமாக அமையும் என்றும் அந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்