கனடா செய்திகள்

ஒன்ராறியோவின் தென் பிராந்தியங்களில் நிலவும் மோசமான வானிலையால் மின் விநியோகம் தடை

16 Apr 2018

ரொறன்ரோ உள்ளிட்ட ஒன்ராறியோவின் தென் பிராந்தியங்களில் நிலவும் கடுமையான உறைபனி மழை, பலத்த காற்று காரணமாக ஆயிரக்கணக்கானோருக்கான மின் விநியோகம் தடைபட்டுள்ளது.

ரொறன்ரோ ஹைட்ரோ இறுதியாக வெளியிட்ட தகவலின் படி, ரொறன்ரோவில் இன்னமும் பத்தாயிரத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் மின் வினியோகம் துண்டிக்கப்பட்ட நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலைமை மோசமாக இருந்த வேளையில் சுமார் 44,000 பேர் வரையில் மின் வினியோகம் இன்றி இருந்ததாகவும், தற்போது படிப்படியாக நிலைமை சீர் செய்யப்பட்டு வருவதாகவும் அது தெரிவித்துள்ளது.

இதேவேளை சுமார் 67,000 வாடிக்கையாளர்கள் மின் தடையை எதிர்கொண்டதாக ஹைட்ரோ வண்ணும் தெரிவித்துள்ளது.

விமானப் பயணங்களிலும் தடங்கல்கள் ஏற்பட்டுள்ள நிலையில், வழக்கத்தினை விடவும் நெருக்கடியான நிலைமை நிலவக்கூடும் என்று தெரிவித்துள்ள ரொரன்ரோ பியர்சன் வானூர்தி நிலைய நிர்வாகம், பயணிகள் தமது பயணங்களை முன்கூட்டியே உறுதிப்படுததிக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்