கனடா செய்திகள்

ஒன்ராரியோவில் ரிம் ஹார்ட்டன்ஸ்க்கு எதிரான ஆர்ப்பாட்டம்

10 Jan 2018

ஒன்ராரியோவின் குறைந்த பட்ச உதிய உயர்வை அடுத்து சில ரிம் ஹார்ட்டன்ஸ் உரிமையாளர்களினால் ஊழியர்களது சம்பள முறிவுகள் மற்றும் பணியாளர்களின் நலன்களையும் குறைத்தனர். இதனால் அதிருப்தி அடைந்த தொழிலாளர் சங்கத்தினர் ஒன்ராரியோவின் ரொரன்ரோ நகரில் சுமார் பன்னிரெண்டு ரிம்  ஹார்ட்டன்ஸ் முன்னால் இன்று(09) ஆர்பாட்டங்களில் ஈடுபட்டனர். இந்த ஆர்பாட்டங்களில் வாடிக்கையாளர்களும் கலந்து கொண்டனர், மேலும் சில வாடிக்கையாளர்கள் தாங்கள் இனி  ரிம் ஹார்ட்டன்சில் எதுவும் வாங்க போவதில்லை என்றும் கூறினர்.. கோபேர்க்கில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் தேசிய ஜனநாயக கட்சி தலைவர் அன்டிரியா ஹார்வாத் கலந்துகொண்டார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV