கனடா செய்திகள்

ஒன்ராரியோவில் உள்ள ஒரு வீதிக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது

16 Apr 2018

கனடா, ஒன்ராரியோவில் உள்ள ஒரு வீதிக்கு உலகப் புகழ்பெற்ற  தமிழ் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அல்லா-ராகா ரஹ்மான் வீதி என அந்த வீதிக்குப் பெயரிடப்பட்டுள்ளது. சிறுவயதிலிருந்து தனது திறமை உழைப்பால் முன்னேறி இன்று உலகளவில் பெருமை பெற்றதுடன் ஒஸ்கார் விருதையும் ஏ.ஆர்.ரஹ்மான் வென்றார்.

உலகின் பல மொழிகளில் இசையமைத்துள்ளவர் ஏ.ஆர். ரஹ்மான். புகழ்பெற்ற  ஒரு தமிழனின் பெயர் கனடாவின் வீதி ஒன்றிற்கு சூட்டப்பட்டிருப்பது பெருமைக்குரியதாகும்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்