கனடா செய்திகள்

ஒட்டாவா லோர்ட்டௌன் பகுதியில் கத்திக்குத்து - ஒருவர் படுகாயம்

11 Feb 2019

ஒட்டாவா லோர்ட்டௌன் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

380 முர்ரே செயிண்ட் பகுதியில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை பிற்பகல் 4:20 மணியளவில் குறித்த கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இருப்பினும் அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்தவர் 44 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து 35 வயதுடையவர் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்