கனடா செய்திகள்

ஒட்டாவாவில் குற்றவாளி ஒருவரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸ்

05 Dec 2018

ஒட்டாவா நகரில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக சந்தேக நபர் ஒருவரை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியினை நாடியுள்ளனர்.

பொலிஸார் வெளியிட்டுள்ள தகவலுக்கு அமைய குறித்த சந்தேக நபர் இறுதியாக ஒட்டாவா நகரின் கிழக்கில் கடந்த நவம்பர் மாதம் 21-ஆம் திகதி உள்ளூர் பள்ளி வளாகத்தில் சரியாக மாலை 4:30மணி மற்றும் 5-மணியளவில் குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்களை 613-236-1222, ext. 8921-ல் தகவல் வழங்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

அத்துடன், குறித்த சந்தேக நபரை கைது செய்வதற்குரிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்