கனடா செய்திகள்

ஒட்டாவாவில் கனமழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறல்

14 Apr 2019

ஒட்டாவாவில் கனமழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டாவா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் நாளை திங்கட்கிழமை சுமார் 30 முதல் 40 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அத்துடன், ஒட்டாவாவின் வடக்கிலுள்ள பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் காரணமாக பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் கோரியுள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்