இலங்கை செய்திகள்

இலங்கை வழங்கி வரும் இணை அனுசரணையிலிருந்து விலக வேண்டும் - மஹிந்த

14 Mar 2019

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு இலங்கை வழங்கி வரும் இணை அனுசரணையிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று 27/2 இன் கீழ் விசேட கூற்று ஒன்றினை முன்வைத்து உரையாற்றும்போதே அவர் இதை குறிப்பிட்டார்.

மனித உரிமைகளை பலப்படுத்தும் நகர்வில் இலங்கையின் நீதித்துறை பொறிமுறை செயலிழந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டி சர்வதேச தலையீட்டை ஏற்படுத்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் முயற்சிகளை அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் இதன்போது தெரிவித்தார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்