இலங்கை செய்திகள்

ஐ.நா சுற்றாடல் மாநாட்டில் ஜனாதிபதி விசேட உரை

14 Mar 2019

கென்யாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிழமை விசேட உரைநிகழ்த்தவுள்ளார்.

கென்யாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் மாநாட்டில் விசேட அதிதியாக கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 4 நாள் கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இவருக்கான விசேட அழைப்பு கென்ய ஜனாதிபதி உஹூரு கென்யட்டாவினால் விடுக்கப்பட்டிருந்தது.

சுற்றாடலை பாதுகாப்பது தொடர்பாக இடம்பெறும் ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் மாநாடு கடந்த 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்ததோடு அதன் நான்காவது அமர்வு நாளை இடம்பெறுகின்றது. இந்த மாநாட்டில் ஜனாதிபதி விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.

கென்யா தலைநகர் நைரோபியில் இடம்பெறும் குறித்த மாநாட்டில் கலந்துகொள்ள ஜனாதிபதி நேற்று பயணமாகி இருந்தார். இந்நிலையில் அவருக்கு கென்யாவில் மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்