இலங்கை செய்திகள்

ஐ.நா இலங்கை அரசாங்கம் மற்றும், இராணுவத்திடம் கோரிக்கை

15 May 2019

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலைமை மேலும் வலுப்பெறமால் தடுக்குாறு, ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசாங்கம் மற்றும் இராணுவத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அவசரகாலச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் தலையீடு, குறுக்கீடுகள் மற்றும் எந்​தவொரு நபரையும் வேறுபடுத்தி பார்க்காமல் சகல பிரஜைகளினதும் உரிமை மற்றும் மரியாதையை பாதுகாக்கும் விதத்தில் அவர்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

தற்போதைய சூழலில் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான காலம் உருவாகியுள்ளதாகவும். இதற்காக அரசியல்வாதிகள், பாதுகாப்பு தரப்பினர் மற்றும்  மதத் தலைவர்கள் உள்ளிட்டவர்கள் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம் என்றும் ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்