இலங்கை செய்திகள்

ஐ.நாவின் பொறுப்புக்களை நிறைவேற்ற இலங்கை தவறியதில்லை - ரவிநாத் ஆரியசிங்க

13 Feb 2018

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொறுப்புக்களிலிருந்து விலகிச்செல்லவில்லை என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஜெனீவாவிற்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

ஆயுத களைவு, குடிப்பெயர்வு, மனித உரிமைகள், சுகாதாரம், புலமைச் சொத்து, விஞ்ஞானம் தொழில்நுட்பம் மற்றும் சர்வதேச வர்த்தக கொள்கை உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் ஐக்கிய நாடுகள் முறைமைக்கும் கொள்கைகளுக்கும் உடன்பட்டு அதன் அடிப்படையில் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பும் அதன் துணை நிறுவனங்களும் இலங்கைக்கு வழங்கி வரும் ஒத்துழைப்புக்கு நன்றி பாராட்டுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்