விளையாட்டு செய்திகள்

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி 5-வது வெற்றி

24 Jan 2020

உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களம் புகுந்த சென்னை அணியினர் வெகுவாக ஆதிக்கம் செலுத்தினர். நட்சத்திர வீரர் வல்ஸ்கிஸ் (13, 75-வது நிமிடம்), ஆந்த்ரே ஸ்கெம்ப்ரி (43-வது நிமிடம்), சாங்தே (87-வது நிமிடம்) ஆகியோர் சென்னை அணிக்காக கோல் அடித்து அசத்தினர். எதிரணியில் செர்ஜியோ கேஸ்டல் (71-வது நிமிடம்) ஒரே ஒரு கோல் திருப்பினார்.

முடிவில் சென்னை அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூரை வீழ்த்தியது. 13-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி 5 வெற்றி, 3 டிரா, 5 தோல்வி என்று 18 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது. சென்னை வீரர் வல்ஸ்கிஸ் 10 கோல்களுடன், அதிக கோல் எடுத்தவர்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி.-மும்பை சிட்டி அணிகள் (இரவு 7.30 மணி) மோதுகின்றன.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்