சினிமா செய்திகள்

ஐஸ்வர்யாராய் தனி குடித்தனம் போகிறாரா?

12 Jan 2018

இந்தி நடிகை ஐஸ்வர்யாராய், மூத்த நடிகர் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்தார். தற்போது ஐஸ்வர்யாராய் அவரது மாமனார் அபிதாப் பச்சன், மாமியார் ஜெயாபச்சன் கணவர், குழந்தையுடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகிறார். இது அமிதாப்பச்சனின் சொந்த பங்களா.

இந்த நிலையில், ஐஸ்வர்யாராயும், அபிஷேக்பச்சனும் சேர்ந்து மும்பையில் ரூ.21 கோடிக்கு அடுக்குமாடி வீடு ஒன்றை வாங்கி உள்ளனர். ஏற்கனவே அமிதாப்பின் மனைவி ஜெயா, மகள் சுவேதா ஆகியோருடன் ஐஸ்வர்யாராய்க்கு தகராறு. எனவே தான் புதிய வீடு வாங்கி இருக்கிறார்கள்.

இதையடுத்து ஐஸ்வர்யாராய் விரைவில் புதிய வீட்டுக்கு கணவர் அபிஷேக், மகள் ஆரத்யாவுடன் தனிக்குடித்தனம் போகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால், இது உண்மையல்ல. பெற்றோர் என்றால் அபிஷேக்பச்சனுக்கு உயிர். அவர்களை விட்டு பிரியமாட்டார். பணத்தை முதலீடு செய்வதற்காகவே மனைவியுடன் சேர்ந்து புதிய வீட்டை வாங்கி இருக்கிறார். ஏற்கனவே அபிஷேக் பச்சன், கரீஷ்மா கபூரை திருமணம் செய்வதாக இருந்தது. அவர் தனிக்குடித்தனம் போக விரும்பியதால் அந்த திருமணம் நடக்கவில்லை. எனவே, அபிஷேக் தனிக்குடித்தனம் போகமாட்டார் என்று அவர் தரப்பில் கூறப்படுகிறது.

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV