இலங்கை செய்திகள்

ஐவர் பலியான தீ விபத்து தொடர்பில் ஒருவர் கைது

13 Oct 2021

ஐந்து உயிர்களை காவு கொண்ட இராகலை முதலாம் பிரிவு தீ விபத்து சம்பவம் தொடர்பாக தீ விபத்தில் உயிரிழந்த தங்கையா என்பவரின் மகனான இரவீந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை இம்மாதம் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வலப்பனை  நீதவான் நீதிமன்ற  நீதவான் டி.ஆர்.எஸ்.குணதாஸ, நேற்று (12) மாலை உத்தரவு பிறப்பித்தார்.

சம்பவம் தொடர்பில் இராகலை பொலிஸார் உட்பட மேலும் பல பொலிஸ் குழுக்கள் கடந்த நான்கு நாட்களாக  விசாரணையில் ஈடுபட்டன.

இதன் போது சம்பவத்தில் உயிர் தப்பியிருந்த தங்கையா இரவீந்திரனை இராகலை பொலிஸார், கடந்த இரண்டு தினங்களாக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்து வந்தனர்.

இதன் போது தீ விபத்து சம்பவம் தொடர்பில் ஒரு சில உண்மைகள் வெளிவந்துள்ளன.

இரவீந்திரன் சம்பவம் இடம்பெற்ற தினத்தில் இராகலை எரிபொருள் நிரப்பு நிலையத்தில்  பெற்றோல் வாங்கியுள்ளமை பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், வீடு தீப்பற்றி எரிந்த போது அணைக்க வந்த மக்களிடம் வீட்டில் யாரும் இல்லையென பொய் கூறியதாகவும் பொலிஸாருக்கு கிடைக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த  அவரை  நேற்று (12) பகல் பொலிஸார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam