சினிமா செய்திகள்

ஐரோப்பிய சுற்றுலாத்தலங்களில் அஜித்.. உலாவரும் புகைப்படங்கள்

23 Jun 2022

வலிமை படத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். 'ஏகே 61' எனத் தற்காலிகமாகத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். மேலும், சமுத்திரக்கனி, வீரா என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

படத்தின் வேலைகள் பெரும்பான்மையாக முடிந்து விட்டது. இதனால் அஜித் ஐரோப்பா நாடுகளில் சுற்றுப்பயணத்திற்கு புறப்பட்டு விட்டார். அப்போது முக்கிய சுற்றுலாத்தலங்களில் அவர் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். முன்னதாக ரேஸ் பைக்கில் பயணித்த படங்கள் வெளிவந்தன.

கப்பலில் பயணம் செய்து அதையும் புகைப்படங்களாக எடுத்து அனுப்ப, அது இணையத்தில் பரவி வருகிறது. இப்போது முக்கிய சுற்றுலா நகரங்களில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.


 






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam