இலங்கை செய்திகள்

ஐரோப்பாவிற்குள் நுழைய முற்பட்ட இலங்கையர்கள் உள்ளிட்ட 558 கைது

14 Apr 2019

ஐரோப்பாவிற்குள் நுழைய முற்பட்ட இலங்கையர்கள் உள்ளிட்ட 558 சட்டவிரோத குடியேற்றவாசிகள் துருக்கியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துருக்கியின் மேற்குப் பகுதியில் உள்ள எடிரின் மாகாணத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை  மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புக்களில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களுள் இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், மொரோகோ, ஈரான், ஈராக், பாலஸ்தீன், எகிப்து மற்றும் சிரிய நாட்டை சேர்ந்தவர்கள் உள்ளடங்குகின்றனர். அவர்களுள் அதிகமானவர்கள் சிரிய நாட்டை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் உள்ளிட்ட அனைவரும் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்