கனடா செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றில் கனேடிய பிரதமர் உரை

17 Feb 2017

ஐரோப்பாவுக்கான பயணம் ஒன்றினை மேற்கொண்டுள்ள கனேடியப் பிரதமா ஜஸ்டின் ரூடோ, நேற்றைய நாள் ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றில் உரையாற்றியுள்ளார்.

இதன் மூலம் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் உரையாற்றியுள்ள முதலாவது கனேடிய பிரதமர் என்ற பெருமையை பிரதமர் ஜஸ்டின் ரூடோ பெற்றுக் கொண்டுள்ளார்.

கடனாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வர்த்தக உடன்படிக்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் அங்கீகாரம் கிடைத்ததை அடுத்து, நேற்றைய நாள் ஐரோப்பிய ஒன்றியத்தில் உரையாற்றிய கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ, இது ஐரோப்பிய ஒன்றியம் ஏற்படுத்தியுள்ள குறிப்பிடத்தக்க வெற்றி எனவும், அமைதியான கூட்டிணைவுக்காக முன்னெப்போதும் எய்தப்படாத சாதனை  எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆக்ககரமான செயல்கள் வரவேற்கப்படுபவையாக மட்டுமல்லாது, மிகவும் முக்கியம் வாய்ந்தன என்பதையும் கனடா நன்கு அறிந்துள்ளதாகவும் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த  வர்த்தக ஒப்பந்தங்கள் ஒருசில தரப்பிற்கே பயனளிக்கும் என்று சிலர் குறை கூறுவதையும் நிராகரித்துள்ள அவர், கனடாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம்  அனைத்துத் தரப்பினரும் நன்மையை அனுபவிக்க முடியும் என்றும் விளக்கமளித்துள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்