இலங்கை செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி வெளியேற்றப்பட்டார்

23 Nov 2022

ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி சமிந்த விஜேசிறியை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் இன்று அறிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களை தாக்குவதற்கு முயற்சித்தாக ஏனைய உறுப்பினர்கள் தெரிவித்ததை தொடர்ந்தே குறித்த எம்.பியை நாடாளுமன்றத்தில் இருந்து சபாநாயகர் வெளியேற்றியுள்ளார்.

மேலும், இன்றைய சபை அமர்வுகளில் அவரை கலந்துகொள்வதற்கு அனுமதிக்கப்போவதில்லை எனவும் சபாநாயகர் அறிவித்தார்.

நாடாளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டம் 79 இற்கு அமைவாகவே இந்த கட்டளையை சபாநாயகர் பிறப்பித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சாவை தாக்குவதற்கு அவர் முயற்சித்தார் என்று தெரிவிக்கப்படுகின்றது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam