இலங்கை செய்திகள்

ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவளித்தமை அவசரப்பட்ட முடிவு - சிவாஜிலிங்கம்

06 Dec 2018

ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாடு தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவம் பெற்றிருக்கும் சகல கட்சிகளும் இணைந்து எடுத்த ஒரு முடிவல்ல என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். 

சமகால அரசியல் நிலமைகள் குறித்து யாழ்.ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

“அன்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் கூடுகின்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தினை கூட்டமாமல் எடுத்த முடிவுதான் அது. அதை அவசரப்பட்ட முடிவாகவே நான் கருதுகின்றேன். 

இதனால்தான் நடைபெற்ற கட்சியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தமிழ் மக்களின் அடிப்படை தேவைகள் தொடர்பான 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் என்று எமது ரெலோ அமைப்பின் சார்பில் நாங்கள் கூட்டமைப்பின் தலைமையிடம் வலியுறுத்தியுள்ளோம். 

ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியமைப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு நிபந்தனைகளை விதிக்க தவறுமாக இருந்தால் ரெலோ கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவாக செயற்பட மாட்டார்கள்” என்றும் சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்