இலங்கை செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் பிரதமருடன் அவசர சந்திப்பு

13 Feb 2018

ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று காலை அலரிமாளிகையில் அவசர சந்திப்பொன்றினை முன்னெடுத்துள்ளனர்

இக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தனி அரசாங்கத்தினை அமைக்கும் அழுத்தமான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய அமைச்சர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் அவசர கூட்டமொன்றினை நடத்தவுள்ளதுடன் பிற்பகல் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்து பேசவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்