இலங்கை செய்திகள்

ஏழு மீனவர்களுடன் காணாமற் போயிருந்த படகு மாலைதீவில் கரையொதுக்கம்

11 Jul 2018

ஏழு மீனவர்களுடன் காணாமற்போயிருந்த, பல நாட்கள் தங்கியிருந்து மீன்பிடியில் ஈடுபடும் மீன்பிடி படகு  மாலைதீவில் கரையொதுங்கியிருப்பதாக மீன்பிடி அமைச்சு தெரிவித்துள்ளது. மீனவர்கள் அனைவரும் ஆரோக்கியமாக காணப்படுவதாகவும் அமைச்சு தெரிவிக்கின்றது.

மீனவர்கள் காணாமற்போன விடயம் தொடர்பில் கடற்படைக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் சிந்துர்லா மற்றும் சுரக்ச ஆகிய படகுகள் தேடுதல் பணிகளை மேற்கொண்டிருந்ததாக கடற்படை பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

காலி கடல் பிரதேசத்திலிருந்து கடந்த 14ஆம் திகதி மீன்பிடிக்காகச் சென்ற குறித்த படகு 29ஆம் திகதியன்று கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பினை இழந்திருந்ததாக கடற்படைத் தெரிவிக்கின்றது.

இந்த நிலையிலேயே படகு மாலைத்தீவில் கரையொதுங்கியுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக கடற்படைத்தெரிவித்துள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்