கனடா செய்திகள்

ஏர் கனடா விமான சேவையில் நேற்று திடீரென ஏற்பட்ட மென்பொருள் செயலிழப்பு

13 Mar 2018

ஏர் கனடா விமான சேவையில் நேற்று திடீரென ஏற்பட்ட மென்பொருள் செயலிழப்பு காரணமாக விமான சேவை பெருமளவில் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக ஏர் கனடா ஊழியர்கள் கைமுறையாக ஆவண சரிபார்த்தலில் ஈடுபட்டதால், பெரும் தாமதம் ஏற்பட்டது.

பயணிகளை அசௌகரியத்திற்கு உள்ளாக்கிய இந்த மென்பொருள் செயலிழப்பு நிகழ்ந்ததற்கான காரணமும், எப்போது நிகழ்ந்தது என்பதும் உடனடியாக கண்டறியப் படவில்லை. ஆரம்பத்தில் கனடாவில் மட்டும நிகழ்ந்ததாக சொல்லப்பட்டாலும் , உலகம் முழுக்க ஏர் கனடா விமான நிலைய சரி பார்ப்பு மையங்களில் இது நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து ட்விட்டரில் ஏர் கனடா நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. விரைந்து தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது. கனடாவின் மார்ச் மாத விடுமுறை காரணமாக வழக்கத்திற்கும் அதிகமாக பயணிகளின் எண்ணிக்கை இருப்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்