கனடா செய்திகள்

ஏமாற்றப்பட்ட நாற்பத்து மூன்று மெக்ஸிகோ நாட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்

12 Feb 2019

கனடாவில் உள்ள விருந்தகங்களில் ஏறக்குறைய எந்தவொரு தொழில் வாய்ப்பும் கிடைக்காத நிலையில், குடிவரவு ஊழல்களில் ஏமாற்றப்பட்ட நாற்பத்து மூன்று மெக்ஸிகோ நாட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  கனடா பொலிஸார் நேற்று திங்கட்கிழமை இந்த தகவலை வௌியிட்டுள்ளனர். 

அவர்களுக்கு முறையான தொழில்வாய்ப்புகள் கிடைக்காதமையால் பலவந்தமாக குறைந்த ஊதியத்துடன் பணியமர்த்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

ஆட்கடத்தல்காரர்களால் ஈர்க்கப்பட்டு சட்டவிரோதமாக கனடாவுக்கு சென்ற அந்த குழுவினரில் பெரும்பாலும் ஆண்களே உள்ளனர். அதிகளவான பணத்தை செலுத்தி அவர்கள் கனடாவுக்கு சென்றுள்ளனர்.

இதன்போது, அங்கு உயர்கல்வியை மேற்கொள்ளவோ அல்லது தொழில் வீசாவை பெற்றுத் தருவதாகவோ, நிரந்தர வதிவிடத்தை பெற்றுத் தருவதாக உறுயளிக்கப்பட்டதாகவும் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.

எனினும், குறித்த 43 பேரும் கனடாவில் பல இன்னல்களுக்கு முகக் கொடுத்ததுடன் ஒன்றாரியோ, பார்ரி போன்ற பகுதிகளில் பலவந்தமாக விருந்தகங்களில் பணியாளர்களாக அமர்த்தப்பட்டிருந்ததாக ஒன்றாரியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

“இந்த ஆட்கடத்தலானது நவீன கால அடிமைப்படுத்தல்” என்று பொலிஸ் ஆணையாளரான ரிக் பர்ணம் என்பவர் தெரிவித்துள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்