உலகம் செய்திகள்

ஏமனில் ராணுவ மீது கார் வெடிகுண்டு தாக்குதல்

13 Mar 2018

தற்கொலை வெடிகுண்டு தீவிரவாதி ஒருவன் கார் ஒன்றில் வெடிகுண்டுகளை ஏற்றி கொண்டு வந்து ராணுவ சமையலறையின் மீது இன்று மோத செய்து குண்டுகளை வெடிக்க செய்துள்ளான்.

இதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.  பலர் காயமடைந்துள்ளனர்.  இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.

ஏமனில் கடந்த 2015ம் ஆண்டில் சவூதி அரேபியா தலைமையிலான ஐக்கிய அரபு எமிரேட்டு படைகள் தீவிரவாதிகளுக்கு எதிராக செயல்பட தொடங்கிய நிலையில் பாதுகாப்பு படையினரை இலக்காக கொண்டு நடத்தப்படும் 2வது தாக்குதல் இதுவாகும்.

ஏடனில் கடந்த மாதம் தீவிரவாத ஒழிப்பு தலைமையகத்தின் மீது நடந்த தாக்குதலில் தீவிரவாதிகள் உள்பட 14 பேர் பலியாகினர்.  இதற்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றது.

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்