உலகம் செய்திகள்

ஏமனில் கார் குண்டு வெடிப்பு

04 Aug 2017

ஏமன் நாட்டின் தெற்கு பகுதியில் ஷாப்வா மாகாணத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை நிரப்பிய காரை வெடிக்கச் செய்தனர்.

ஏமன் நாட்டில் அல்கொய்தா பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

அந்த நாட்டின் தெற்கு பகுதியில் ஷாப்வா மாகாணம் உள்ளது. அங்கு ரெதூம் மாவட்டத்தில் ராணுவ சோதனைச்சாவடி அருகே நேற்று முன்தினம் 2 பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை நிரப்பிய காரை ஓட்டிச்சென்று மோதி வெடிக்கச் செய்தனர்.

இதில் சிக்கி, பாதுகாப்பு படை வீரர்கள், அப்பாவி உள்ளூர் மக்கள் என 5 பேர் உடல் சிதறி பலியாகினர்.

இதேபோன்று, தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 2 பேரும் உடல் சிதறி உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலை நடத்தியவர்கள் அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் என தகவல்கள் கூறுகின்றன. இந்த கார் குண்டு தாக்குதலால் அந்தப் பகுதி மக்களிடையே பதற்றம் நிலவுகிறது.

 

 

 

 

 

 






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV