இலங்கை செய்திகள்

ஏக்­கிய இராஜ்ய என்­பது ஒரு­மித்த நாடு என தமிழ் மக்களிடம் கேவலமான பொய்யை கூறுகின்றார்கள் - சுரேஸ் பிரேமச்சந்திரன்

12 Jan 2018

“ஏக்­கிய இராஜ்ய என்பது ஒற்­றை­யாட்சி என்­பதே ஆகும். இந்­நி­லையில்  ஒற்­றை­யாட்­சியை ஏற்றுக் கொண்­டி­ருப்­ப­தாக கூறும் தமிழ்­த்தே­சிய கூட்­ட­மைப்பின் நாடாளு­மன்ற உறுப்­பி­னரும், புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்­கைக்­காக வக்­கா­லத்து வாங்­கு­ப­வ­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன், தமிழ் மக்களின் அபிலாசைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று கூறுவது நகைப்பிற்கிடமானது” என கூட்டமைப்பின் முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சம­கால அர­சியல் நில­மைகள் குறித்து நேற்­று யாழ்.ஊடக அமை­யத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரி­விக்­கும்­ போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார். 

ஏக்­கிய இராஜ்ய என்­பது ஒரு­மித்த நாடு என சுமந்­திரன் கூறி­னாலும், உண்­மையில் அது ஒற்­றை­யாட்­சி­யே­யாகும். அதனை சிங்­கள தலை­வர்கள் குறிப்­பாக ஜனா­தி­பதி, பிர­தமர் ஆகியோர் தங்­க­ளு­டைய மக்­க­ளுக்கு கூறு­கி­றார்கள். ஆனால் சுமந்­திரன் போன்ற தமிழ் மக்­களின் பிர­தி­நி­திகள் தாம் சார்ந்த மக்­க­ளுக்கு மிக கேவ­ல­மான பொய்யை சொல்­கி­றார்கள் என்று சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV