சினிமா செய்திகள்

ஏஆர் ரகுமானுக்கு லதா மங்கேஷ்கர் ஆதரவு

17 Jul 2017

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இங்கிலாந்து நாட்டில் லண்டனில் ‘நேற்று இன்று நாளை’ என்ற பெயரில் சமீபத்தில் நடத்திய இசை நிகழ்ச்சி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் அதிகமான தமிழ் பாடல்களை பாடியதாக இந்தி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் நிகழ்ச்சியை புறக்கணித்து பாதியிலேயே வெளியேறினார்கள்.  டிக்கெட் கட்டணத்தை திருப்பி தர வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் அவர்கள் கருத்து பதிவிட்டனர். இதனால் சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இங்கிலாந்தில் நடந்த இசை நிகழ்ச்சிக்கு இந்தி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறித்து ஏ.ஆர்.ரகுமான் விளக்கம் அளிக்கையில்,

 “ரசிகர்கள் ஆதரவு இல்லாமல் நான் இல்லை. அவர்களுக்கு நிறைய கடமைப்பட்டு இருக்கிறேன். எங்கள் இசைக்குழு சிறப்பான பாடல்களை தர முயன்று இருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் நாங்கள் நேர்மையாகவே நடந்து கொண்டோம்” என்று கூறினார். விமர்சனங்கள் எழுந்த நிலையில் ஏஆர் ரகுமானுக்கு பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

 பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் பேசுகையில் இசைக்கு மொழி கிடையாது என்றார். லண்டனில் லதா மங்கேஷ்கரும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார். இப்போது எழுந்து உள்ள விமர்சனங்களால் வருத்தம் அடைந்து உள்ளார்.

அவர் பேசுகையில், என்னுடைய 70 வருட அனுபவத்தில் அதிகமான பிராந்திய மொழி பாடல்களை மேடைகளில் பாடி உள்ளேன், பஞ்சாபி, பெங்காலி மற்றும் தோக்ரி மொழி பாடல்களை கூட பாடி உள்ளேன். இந்திய மொழியில் பாடப்படும் அனைத்து பாடல்களையும் ரசிப்பார்கள். இசைக்கு மொழி கிடையாது. ரகுமான்ஜி தமிழில் மிகவும் அதிகமான நினைத்துப்பார்க்க கூடிய பாடல்களை பாடிஉள்ளார், அவருடைய தமிழ் பாடல்கள் இந்திக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு உள்ளது. இரு மொழியிலும் இந்த பாடல்கள் மிகவும் பிரபலமானவை. என்னுடைய அதிகமான இந்தி மொழி பாடல்கள் பெங்காலியில் ஹேமந்த் குமார் மற்றும் சலில் சௌத்ரி ஆகியோரால் உருவாக்கப்பட்டது என்றார்.

சகிப்புத்தன்மையின்மையின் அறிகுறியானது இசையிலும் வளர்வதாக தாம் உணர்வதாகவும், இது ஆரோக்கியமானது கிடையாது எனவும் லதா மங்கேஷ்கர் கூறிஉள்ளார்.

லதா மங்கேஷ்கர் நீண்டகால பயணத்தில் சுமார் 38 பிராந்திய மொழிகளிலும், சர்வதேச மொழிகளிலும் பாடிஉள்ளார். ஆங்கிலத்திலும் அவர் பாடிஉள்ளார். “என்னால் புரிந்துக் கொள்ளமுடியவில்லை என்றாலும் எல்லா மொழிகளிலும் பாடுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தெரியாத மொழியில் பாடும் போது என்னுடைய பயம் எல்லாம் என்னுடைய உச்சரிப்பு தவறாகிவிடுமோ என்பது குறித்துதான். இதில் அதிர்ஷ்டமாக நான் தவறாக உச்சரித்ததாக இதுவரையில் யாரும் புகார் தெரிவிக்கவில்லை என கூறிஉள்ளார் லதா மங்கேஷ்கர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV