இலங்கை செய்திகள்

எரிபொருள் விலை தொடர்பில் அமைச்சரவை முடிவு

12 Oct 2021

இந்த நேரத்தில் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டாம் என்று அமைச்சரவை முடிவு செய்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், நேற்று இரவு, ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நேரத்தில், எரிபொருள் விலையை அதிகரிக்கக் கூடாது என்று தெரிவித்த ஜனாதிபதி, மக்களுக்கு சுமையளிக்காமல், அரசாங்கமே சுமையை சுமக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதேவேளை, எரிபொருள் விலையை மீண்டும் அதிகரித்தால் பஸ் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டும் என, இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam