இலங்கை செய்திகள்

எரிபொருள் விலை அதிகரித்த நிலையில் பஸ் கட்டணங்கள் நாளை முதல் அதிகரிப்பு

16 May 2018

பஸ் கட்டணத்தை 6.56 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கிகாரமளித்துள்ளது. அதனடிப்​படையில் இன்று (16)  புதன்கிழமை முதல் கட்டணங்கள் அதிகரிக்கப்படும்.

இருப்பினும் ஆரம்பக் கட்டணத்தில் மாற்றம் செய்யப்படவில்லையென சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.


இன்று காலை ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில் 20 சதவீதமாக பஸ் கட்டணத்தை அதிகரிக்க எதிர்பார்ப்பதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் இன்று நள்ளிரவு முதல் குறித்த பஸ்கட்டண அதிகரிப்பு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்