இலங்கை செய்திகள்

எரிபொருள் விற்பனை நிலையத்தில் தீ!

13 Feb 2018

ராகமை கெந்தலியத்த பாலுவ கனேமுல்ல பிரதேசத்தில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையம் ஒன்றில் திடீர் தீர்ப்பரவல் ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு 10.50 மணியளவில் ஏற்பட்ட இந்த தீப்பரவல் காரணமாக எவ்வித உயிராபத்துக்களும் ஏற்படவில்லை.

பிரதேசவாசிகள் மற்றும் கம்பஹா தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயிணை கட்டுப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீப்பரவல் காரணமாக ஏற்பட்ட சொத்து இழப்பு தொடர்பில் இதுவரை கணிக்கப்படாத நிலையில் சம்பவம் தொடர்பில் ராகமை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV