இலங்கை செய்திகள்

எரிபொருளின் விலை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு

11 Oct 2018

எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டு, நேற்று நள்ளிரவு முதல்  அமுல்படுத்தப்படுவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இதன் படி 92 ஒக்டைன் பெற்றோல் 149 ரூபாவில் இருந்து 155 ரூபாவாகவும், 95 ஒக்டைன் பெற்றோல் 161 ரூபாவில் இருந்து 169 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.  சூப்பர் டீசலின் புதிய விலை 141 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

புதிய எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைவாக இந்த விலையேற்றம் அமுல்படுத்தப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்