இந்தியா செய்திகள்

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி 68 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை

13 Jun 2018

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழக சிறைகளிலிருந்து மேலும் 68 ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதே காரணத்திற்கு முன்னதாக தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளில் முதற்கட்டமாக 67 கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்தது.

இந்நிலையில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி மேலும் 68 கைதிகளை விடுதலை செய்யப்பட உள்ளனர்.

அதன்படி புழல் மத்திய சிறையில் 44 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் என 52 பேரும், இதர சிறைச்சாலைகளில் இருந்து 16 பேரும் என மொத்தம் 68 கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV