சினிமா செய்திகள்

என்னை கலாய்க்கிற ஐடியா இருக்கா?

17 Jul 2017

யூடியூபில் வெப் சீரியஸ் பார்ப்பவர்கள் அப்துலை அறிந்திருப்பார்கள்.

’அதே கண்கள்’ படத்தில் அறிமுகமான இவர், தற்போது விஜய்யுடன் மெர்சல் படத்தில் நடிக்கும் அளவுக்கு உயர்ந்துவிட்டார்.

அப்துல் உடன் யு-டியூப் பணியாற்றிய செய்த விஷ்ணுதான் தற்போது மெர்சல் படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

தன் மெர்சல் அனுபவங்களை ஒரு பேட்டியில் பகிர்ந்துக் கொண்டார் அப்துல்.

’நான் செய்த வீடியோக்களை பார்க்க வேண்டும் என விஜய் ஒருமுறை கேட்டார்.

எனவே விஜய் சம்பந்தப்பட்ட வீடியோவை காட்டினேன்.

அதை பார்த்த விஜய் ’ ஓ என்னை இப்படியெல்லாம் வைச்சு வீடியோ பண்ணியிருக்கீங்களா? எனக் கேட்டார்.

ஐயோ அப்படி எல்லாம் ஒன்னும் இல்லைங்க அண்ணா என சொன்னேன்.

ஓ அப்போ அப்படி ஒரு ஐடியா எல்லாம் இருக்கா என குறும்பாக சொன்னார்.’ என அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV