இலங்கை செய்திகள்

எனது பதவிக்காலத்திற்குள் ஒருவருக்காவது மரண தண்டனையை நிறைவேற்றுவேன் - ஜனாதிபதி 

22 Oct 2019

போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவருக்காவது தனது பதவிக்காலத்திற்குள் மரண தண்டனையை நிறைவேற்றுவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் தேசிய இளைஞர் முன்மாதிரி மூன்றாவது மாநாட்டில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, இளைஞர்களை வலுவூட்டவும் அவர்களுக்குரிய சலுகைகளை வழங்கவும் தனது பதவிக் காலத்தில் பாரிய வேலைத்திட்டங்கள் பலவற்றை முன்னெடுத்ததாக கூறியுள்ளார்.

கல்விமான்கள் உள்ள நாட்டில் பிரச்சினைகள் குறைவதாகவும் நாடு தற்போது வளர்ச்சிக்கான பாதையில் பயணிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் போதைப்பொருள் பாவனையிலிருந்து நாட்டு இளைஞர்களை காப்பாற்ற கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு கடமையாற்றியதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்க தான் முயற்சித்தபோது அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் எனவே, அது குறித்த நீதிமன்ற தீர்ப்புக்கு தலைசாய்ப்பதாகவும் சில வேளைகளில் தனது பதவி காலத்துக்குள்ளேயே சாதகமான தீர்ப்பு கிடைக்குமானால் போதைப்பொருள் கூறியுள்ளார்.

மேலும் கடந்த காலங்களில் ஊடக சுதந்திரத்தை வழங்கியதன் மூலம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும் அவற்றுக்கு எதிராக தான் செயற்படவில்லை எனவும் தற்போது முழுமையாக ஊடக சுதந்திரம் உறுதிப் படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்