இலங்கை செய்திகள்

எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்த சபாநாயகரின் நிலைப்பாடு இன்று

10 Aug 2018

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்த சபாநாயகரின் நிலைப்பாடு இன்று நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கப்படும்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளின் நிலைப்பாடு மற்றும் சட்ட ரீதியான ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்ட பின்னர் சபாநாயகர் கரு ஜயசூரியவின் நிலைப்பாடு அறிவிக்கப்படவுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் பதவியைப் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவுக்கு வழங்குமாறு 08 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்