இலங்கை செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர் - நோர்வே தூதுவர் இடையே சந்திப்பு

14 Mar 2019

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை நோர்வே நாட்டின் தூதுவர் கஸ்ட்டட் சேத்தேர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இச் சந்திப்பு நேற்று மாலை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது நோர்வே நாட்டின் உதவித் தூதுவர் ஸ்வென்ஸ்கிருவும் கலந்து கொண்டிருந்தார்.

இச் சந்திப்பின்போது, இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் தற்போதைய பணி, கொள்கைகள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பணி வரையறைக்குட்பட்ட சிக்கல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் நோர்வே தூதுவருக்குமிடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்