இலங்கை செய்திகள்

எதனையும் அறியாதவர்களாக இந்த நாட்டின் அப்பாவி மக்கள் - அத்துரலிய ரத்ன தேரர்

06 Dec 2018

அரசாங்கத்துக்குள் என்ன நடைபெறுகின்றது என்பதை அறியாதவர்களாக இந்த நாட்டின் அப்பாவி மக்கள் இருக்கின்றதாகவும், அவர்கள் அறியாதவற்றை அறிவுறுத்தி நாட்டைப் பாதுகாக்கும் பணியையே தான் செய்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

தனியார் வானொலி சேவையில் இடம்பெற்ற அரசியல் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறினார்.

“ஐக்கிய தேசியக் கட்சியினர் ரணிலுக்கு அதிகாரத்தைக் கொடு எனக் கூறுகின்றனர். மஹிந்தவாதிகள் மஹிந்தவிடம் அதிகாரத்தை வைத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறுகின்றனர். இருப்பினும், இவ்வாறு அதிகாரத்தில் உள்ளவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதை அப்பாவிப் பொது மக்கள் யாரும் அறிவதில்லை.

நாட்டில் என்ன நடைபெறுகின்றது என்பதை மக்களுக்கு வெளிப்படுத்தும் பொறுப்பையே நான் செய்கின்றேன். இதுதான் நடைபெறுகின்றது. எனவே, நாம் விரைவாக செயற்பட வேண்டியுள்ளோம்” எனவும் தேரர் மேலும் குறிப்பிட்டார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்