கனடா செய்திகள்

எட்மன்டனில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயம்

11 Feb 2019

கனடாவின் தென்மேற்கு எட்மன்டனில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயமடைந்துள்ளனர். எட்மன்டனின் Ellerslie வீதியினை அண்மித்த பகுதியிலேயே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த துப்பாக்கி பிரயோகத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்