கனடா செய்திகள்

எட்மன்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு - பொலிஸார் தீவிர விசாரணை

11 Jul 2017

எட்மன்டனில் நேற்று இடம்பெற்ற இருவேறு துப்பாக்கி பிரயோக சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

எட்மன்டன் நகர மைய 104 ஆவது வீதி மற்றும் 107 ஆவது அவனியூ பகுதியில் நேற்று மாலை 6.30 மணியளவில் முதலாவது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை 102 ஆவது வீதி மற்றும் 108 ஆவது அவனியூ பகுதியில் இரவு 8 மணியளவில் மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஆண் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக நேரில் கண்ட ஒருவர் தெரிவித்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்த குறித்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு நேற்றைய தினம் எட்மன்டனில் இடம்பெற்ற இருவேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டனவா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV