இலங்கை செய்திகள்

ஊழலற்ற நாட்டை உருவாக்கத் தகுதியுடையவரே சஜித் பிரேமதாஸ - அஜித்.பீ. பெரேரா 

14 Aug 2019

ஊழலற்ற நாட்டை உருவாக்குவதற்கான தகுதியுடைய தலைவரொருவர் ​தேவையென்றும், இதற்கு தகுதியுடைய தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாஸவே என, அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித்.பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸவை தெரிவு செய்வது தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் முழு நாட்டு மக்களும் விருப்பத்துடன் இருக்கின்றனரெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்